படவேடு பகுதி கிராம மக்கள் பயன்பெற கூடுதலாக வங்கி ஏற்படுத்த கோரிக்கை


படவேடு பகுதி கிராம மக்கள் பயன்பெற கூடுதலாக வங்கி ஏற்படுத்த கோரிக்கை
x

படவேடு பகுதி கிராம மக்கள் பயன்பெற கூடுதலாக வங்கி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

படவேடு பகுதி கிராம மக்கள் பயன்பெற கூடுதலாக வங்கி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படவேட்டில் ஒரே ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் ஜவ்வாதுமலை மலையில் உள்ள கானமலை, படவேடு பகுதி 24 குக்கிராமங்கள், அனந்தபுரம், வாழியூர், காளசமுத்திரம், குப்பம், உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு வைத்துள்ளனர்.

இந்த வங்கியில் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் வங்கி சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் காலதாமதம் ஆகிறது. எனவே படவேடு பகுதியில் கூடுதலாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை திறக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு இது சம்பந்தமாக படவேடு பகுதியில் விரைவில் கூடுதலாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என படவேடு பகுதியைச் சுற்றி ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்/


Next Story