மகளிர் பாதுகாப்புக்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் - சபாநாயகர் அப்பாவு
மகளிர் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை,
மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் "இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்" விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மகளிர் நலன், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக விரைவில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டமாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story