ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை


ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
x

பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்

பாளையங்கோட்டை பெருமாள்புரம் மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 84). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியர். இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும், இதற்காக பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணம் அடையவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதாசிவம் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். கிணற்றில் இறங்கி சதாசிவம் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பெருமாள்புரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story