மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிப்பதாக மிரட்டிய ஓய்வுபெற்ற தொழிலாளி


மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிப்பதாக மிரட்டிய ஓய்வுபெற்ற தொழிலாளி
x

மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிப்பதாக மிரட்டிய ஓய்வுபெற்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூரை சேர்ந்தவர் நாசர். இவர் மேட்டூர் நகராட்சியில் குடிநீர் வழங்கும் பிரிவில் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ஓய்வு பெற்று பல மாதங்கள் ஆகியும், அதற்கான பணபலன்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை. இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாசர் நேற்று, மண்எண்ணெய் கேனுடன் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அவர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தார். அங்கிருந்த நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தினர். மேலும் விரைவில் பணப்பலன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து நாசர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீக்குளிப்பதாக ஓய்வு பெற்ற தொழிலாளி மிரட்டல் விடுத்த சம்பவம் மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story