அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அரிசி வியாபாரி சாவு


அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அரிசி வியாபாரி சாவு
x

திருச்சியில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அரிசி வியாபாரி இறந்தார். இதனையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

திருச்சி

திருச்சியில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அரிசி வியாபாரி இறந்தார். இதனையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

அரிசி வியாபாரி

திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 55). அரிசி வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பீமநகர் மேம்பாலம் அருகே வந்தபோது, இவரை வழிமறித்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த சிவனேசனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இது குறித்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பாலக்கரை போலீசார், லால்குடி நடராஜபுரத்தை சேர்ந்த கலைபுலிராஜா (27), தஞ்சையை சேர்ந்த வீரமணி (26), மண்ணச்சநல்லூரை சேர்ந்த பரமகுரு உள்பட 5 பேரை கைது செய்தனர்.

கொலை வழக்கு

இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவனேசன் நேற்று முன்தினம் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பாலக்கரை போலீசார் மாற்றம் செய்து, வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story