பெருந்துறை அருகே உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு


பெருந்துறை அருகே உடைப்பு ஏற்பட்ட   கீழ்பவானி வாய்க்காலை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு
x

பெருந்துறை அருகே உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்காலை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே ஈரோடு ரோடு வாய்க்கால் மேடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

இதுபற்றி அறிந்ததும் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்று கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், 'கசிவுநீர் கான்கிரீட் தளத்தை தரத்துடன் விரைந்து மீண்டும் கட்டி முடித்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி, திருவாச்சி ஊராட்சி தலைவர் சோளிபிரகாஷ், ஊராட்சி தி.மு.க. செயலாளர் எஸ்.என்.ரங்கசாமி உள்பட பலரும் உடன் இருந்தனர்.


Next Story