ஆயக்குடி அருகே மரத்தில் மோதிய பள்ளி பஸ்
ஆயக்குடி அருகே மரத்தில் பள்ளிக்கூட பஸ் மோதியது.
திண்டுக்கல்
சத்திரப்பட்டி அருகே தா.புதுக்கோட்டை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூட பஸ் இன்று சர்வீசுக்காக பழனிக்கு வந்துவிட்டு மீண்டும் சத்திரப்பட்டி நோக்கி சென்றது. பஸ்சை துரைராஜ் (வயது 40) என்பவர் ஓட்டினார். கணக்கன்பட்டியை அடுத்த நல்லதங்காள் ஓடை பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. மேலும் முன்பகுதி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார். பஸ்சில் மாணவர்கள் யாரும் பயணிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story