பட்டிவீரன்பட்டி அருகே கார் கவிழ்ந்து மாணவன் பலி்; 2 பேர் படுகாயம்


பட்டிவீரன்பட்டி அருகே கார் கவிழ்ந்து மாணவன் பலி்; 2 பேர் படுகாயம்
x

பட்டிவீரன்பட்டி அருகே கார் கவிழ்ந்து மாணவன் பலியானார். உடன் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 36). இவர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யன்கோட்டைக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் பரத்குமார் நேற்று முன்தினம் தனது உறவினர்களான பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ராக்கேஷ் (11), அய்யன்கோட்டையை சேர்ந்த முருகவேல் மகன் ரக்சன் (9) ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் மருதாநதி அணையை சுற்றி பார்ப்பதற்காக சென்றார். பின்னர் அங்கிருந்து 3 பேரும் அய்யன்கோட்டைக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். பட்டிவீரன்பட்டி அருகே ஒத்தக்கடை என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராக்கேஷ், ரக்சன், பரத்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராக்கேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான ராக்கேஷ், பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story