ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை


ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயதுடைய சிறுமி. இவள் பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மாணவி பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் பள்ளி முடிந்ததும், அரசு டவுன் பஸ் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவி இருக்கையின் பின்புறம் அமர்ந்து இருந்த விளந்தை கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான செந்தமிழ்ச்செல்வன் (வயது 35) என்பவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story