நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டரால் பரபரப்பு
வேலூரில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
வேலூரில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ஸ்கூட்டர் தீப்பற்றியது
வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 24). இவர் இன்று காலை அவருடைய தந்தை கணேசனை சென்னைக்கு பஸ்சில் அனுப்பி வைப்பதற்காக வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு ஸ்கூட்டரில் அழைத்து வந்தார்.
தந்தையை பஸ் ஏற்றிவிட்டு கணேசன் ஸ்கூட்டரில் மூஞ்சூர்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வேலூர் நேஷனல் சர்க்கிள் அருகே அண்ணாசாலையில் சென்ற போது திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்தபடி அதனை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
வாகன ஒட்டிகள் அதிர்ச்சி
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.
நடுரோட்டில் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடுரோட்டில் ஓடும்போதே ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.