ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு


ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மது குடித்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

மது குடித்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவட்டார் அருகே உள்ள தேமானூர் கடம்பாற்றுவிளையை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது48), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய வீட்டின் அருேக நின்று அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் ரமேஷ் (23), புளியம்விளையை சேர்ந்த பிரவின் (24) ஆகியோர் மது குடித்தனர். இதை ராஜகுமார் தட்டிக்கேட்டதால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ராஜகுமார் வீட்டில் இருந்த போது ரமேஷ், பிரவின் உள்பட 5 பேர் அங்கு வந்து அவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினர். இதில் பின் தலையில் காயமடைந்த ராஜகுமார் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராஜகுமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிளம்பர் ரமேஷ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபோல் ரமேஷ் போலீசில் அளித்த புகாரில், தான் கடம்பாற்றுவிளையில் ஒரு வீட்டில் வேலை பார்த்ததற்கான சம்பளத்தை வாங்கச்சென்றபோது ராஜகுமார் தடுத்து நிறுத்தி வெட்டுகத்தியால் வெட்டியதாக கூறியுள்ளார். இந்த புகார் அடிப்படையிலும் ராஜகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story