வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது


வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர்

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 6-வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (வயது 19). இவர் கடந்த 28-ந் தேதி துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

அப்போது, அங்கு அவரது நண்பர் பிரகாஷ் என்பவர் வந்தார். அவர்களுக்கு திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு, முன்விரோதமானது.

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் அருண்குமார் சுந்தரவேல்புரம் அருகே சாப்பிட சென்ற போது, அங்கு வந்த பிரகாஷ் சமாதானமாக இருப்போம் என்று கூறி அருண்குமாரை மது குடிப்பதற்காக பொன்சுப்பையா நகர் 1-வது தெருவில் உள்ள காலி இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பிரகாசின் நண்பர்களான சேதுராஜா தெருவை சேர்ந்த செல்லமுத்துகணேஷ் மகன் கவுதம் (19), சந்தனபாரத், மைக்கேல், ஜோசுவா ஆகியோருடன் சேர்ந்து அருண்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயம் அடைந்த அருண்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம், சந்தனபாரத், மைக்கேல் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story