வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

சேரன்மாதேவியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுடலைமுத்து ராஜா (வயது 27). இவர் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாரியப்பன் மகன் கார்த்திக் (19) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று மாலை வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வந்த மர்ம நபர், திடீரென பானிபூரி கடையை அடித்து நொறுக்கி சூறையாடி, பயங்கர ஆயுதத்தால் கார்த்திக்கின் கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இதனை தடுக்கச் சென்ற சுடலைமுத்துராஜா மீதும் லேசான காயம் ஏற்பட்டது. கார்த்திக்கிற்கு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story