சிறப்பாக செயல்படும் விடுதிகள் தேர்வு


சிறப்பாக செயல்படும் விடுதிகள் தேர்வு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் விடுதிகள் தேர்வு செய்யப்பட்டு்ள்ளன.அந்த விடுதிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் விடுதிகள் தேர்வு செய்யப்பட்டு்ள்ளன.அந்த விடுதிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதில் சிறப்பாக செயல்படுவதாக திமிரி அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி முதலிடமும், அரக்கோணம் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி இரண்டாம் இடமும், ராணிப்பேட்டை சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதி மூன்றாம் இடத்திற்கும் தேர்வாகி உள்ளன. விடுதிகளின் காப்பாளர்கள் ஞானசேகரன் (திமிரி), ஹரி (அரக்கோணம்), அனிதா (ராணிப்பேட்டை) ஆவார்கள். இந்த ஆண்டுக்கான விருது மற்றும் பரிசுத்தொகை இந்த 3 விடுதிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.


Next Story