கவர்னருக்கு எதிராக தனி தீர்மானம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார்
தமிழக கவர்னருக்கு மத்திய அரசு உரிய அறிவுரைகளை வழங்க இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, ஜனாதிபதியை வலியுறுத்தி தமிழக அரசு தனித்தீர்மானம் கொண்டு வருகிறது.
தமிழக சட்டசபை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், நிறைவேறும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தர மத்திய அரசு, ஜனாதிபதி கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பொதுவெளியில் கவர்னர் தெரிவிக்கும் கருத்துக்கள் பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் அது மாநில நிர்வாகத்துக்கு ஏற்புடையதல்ல அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story