அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தயாராகி வரும் தனி அறை...!
நாளை மறுநாள் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அறை தயாராகிவருகிறது.
சென்னை,
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை அமைச்சராக்க கவர்னர்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி. வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை மறுநாள் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் தனி அறை தயாராகி வருகிறது. அறை பணிகளை நாளை இரவுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story