நந்திகேஸ்வரருக்கு வெள்ளிக்கவசம்
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூரில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். .ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் எலிக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு வேர் கட்டப்படுகிறது. இந்த கோவிலில் இதனைமுன்னிட்டு கோவிலில் பிரதோஷ நாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நந்திகேஸ்வரர், உற்சவர், பிரதோஷ நாயகி மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்னாள் நிர்வாக அதிகாரி என்.பன்னீர்செல்வம், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஜோதிமலை இறைபணி மன்ற கூட்டத்தலைவர் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.