மலை அடிவாரப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை
மணிமுத்தாறு அருகே மலை அடிவாரப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருநெல்வேலி
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் பொட்டல் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக தந்தத்துடன் ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்கி சுற்றித்திரிகிறது. மேலும் தற்போது கரடி ஒன்றும் மணிமுத்தாறில் உள்ள கோவில், காவல் நிலைய பகுதியில் சுற்றி திரிகின்றது. யானை மற்றும் கரடி சுற்றி திரியும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், யானை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story