குப்பைக்கு வைத்த தீயால் புகை மண்டலம்; 5 குழந்தைகள் மயக்கம்


குப்பைக்கு வைத்த தீயால் புகை மண்டலம்; 5 குழந்தைகள் மயக்கம்
x

குப்பைக்கு வைத்த தீயால் புகை மண்டலம்; 5 குழந்தைகள் மயக்கம் அடைந்தனர்.

விருதுநகர்

திருவெறும்பூரையடுத்த குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அருகே உள்ள தனியார் குடியிருப்பினர் அங்கு சேகரமாகும் குப்பைகளை திருவளர்ச்சிபட்டிக்கு செல்லும் சாலைப் பகுதிகளில் கொட்டி எரித்து விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலயில் நேற்று இதேபோல் குப்பைகளை கொட்டி எரித்துள்ளனர். இதனால் திருவளர்ச்சிபட்டி கிராமம் முழுவதும் புகைமண்டலமாக காட்சிஅளித்தது. இந்த புகையால் லாசர் என்பவரது மகள் ஆல்ரைட் உள்பட 5 குழந்தைகள் மயங்கி விழுந்தனர். முதலுதவி சிகிச்சைக்குபின் அவர்கள் குணம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து திருவளர்ச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த ஜேசுராஜ் கூறுகையில், அரசுக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டி தீ வைக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமம்அடைந்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story