வீட்டுக்குள் புகுந்த பாம்பு சிக்கியது


வீட்டுக்குள் புகுந்த பாம்பு சிக்கியது
x

திருவாடானை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு சிக்கியது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது வீட்டின் குளியலறையில் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்டதும் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டு சென்றனர்.


Related Tags :
Next Story