மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x

மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

சிறுபாக்கம்:

சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு மங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் ஆஸ்பத்திரி கட்டிட நோயாளிகள் பிரிவு அறைக்குள் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடந்த நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பாம்பை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் அந்த பாம்பு சிறிது நேரத்தில் தாமாகவே வெளியே சென்று அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, பாம்பு வெளியே சென்றதை பார்த்த நோயாளிகள், ஆஸ்பத்திரி ஊழியர்களும் நிம்மதியடைந்தனர்.


Next Story