ரேஷன் கடைக்குள் புகுந்த பாம்பு
பழனி ரெயில்நிலையம் அருகே ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது.
பழனி ரெயில்நிலையம் அருகே ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரேஷன் கடைக்குள் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு பழனி வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே ரேஷன் கடைக்குள் நாகப்பாம்பு புகுந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாம்புகள் புகுந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளிடம் கேட்டபோது, கடையை சுற்றிலும் புதர்கள், மரங்கள் நிறைந்து உள்ளதால் விஷ பூச்சி, பாம்புகள் நடமாட்டம் உள்ளன. எனவே புதர்களை அகற்ற அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.