குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு
கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் குடியிருப்புக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
திண்டுக்கல்
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியில் அட்டுவம்பட்டி மலைக்கிராமம் உள்ளது. இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.
Related Tags :
Next Story