பள்ளி விடுதிக்குள் புகுந்த பாம்பு


பள்ளி விடுதிக்குள் புகுந்த பாம்பு
x

பள்ளி விடுதிக்குள் புகுந்த பாம்பு

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குள் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதியும் உள்ளது. நேற்று பகலில் மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைகண்ட மாணவிகள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ், தீயணைப்பு வீரர்கள் விவேகானந்தன், அட்சத கண்ணன், பார்த்திபன், ரகுமான்கான், முருகன் ஆகியோர் விரைந்து சென்று விடுதிக்குள் மறைந்திருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story