பழனியில் சிற்பக்கூடத்துக்குள் புகுந்த பாம்பு
பழனியில் சிற்பக்கூடத்துக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
திண்டுக்கல்
பழனி ராஜாஜி சாலையில் தனியார் சிற்பக்கூடம் உள்ளது. இந்த சிற்பக்கூடத்தின் முன்பு சாலையோரத்தில் சிலைகள், கற்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் இன்று அந்த சிற்பக்கூடத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிலைகளுக்கு அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது சிலைகளுக்கு அடியில் இருந்த 3 அடி நீள விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது.
Related Tags :
Next Story