திருநகரில் 'ஷூ'வுக்குள் புகுந்த பாம்பு


திருநகரில் ஷூவுக்குள் புகுந்த பாம்பு
x

திருநகரில் ‘ஷூ’வுக்குள் பாம்பு புகுந்தது

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் மாணிக்கம் நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 38). இவர் தனது காலணிகளை (ஷூ) வீட்டின் சுவரில் வைத்திருந்தார். சம்பவத்தன்று ஆறுமுகம் ஷூவை அணிய முயன்றார். அதற்குள் ஏதோ நெளிவதை கண்டார். இதையடுத்து உள்ளே பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடி வீரரான சகாதேவன் என்பவர் அங்கு சென்று ஷூவுக்குள் புகுந்திருந்த 2 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.


Next Story