கோவிலுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
திருப்பத்தூரில் கோவிலுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் சக்தி தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 3 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று தெருவில் இருந்து கோவிலுக்குள் புகுந்தது.
இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பாம்பு கோவில் உபகரணங்கள் வைக்கும் அறைக்குள் சென்று விட்டது.
இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரர் சினேக் ஆல்பர்ட் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக கோவிலுக்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்தார். மேலும் கோவிலில் பிடிபட்ட பாம்பை அடிக்க வேண்டாம் எனவும் அங்குள்ள ஏரியில் விடும்படி பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து பாம்பு அங்குள்ள ஏரியில் விடப்பட்டது.