கூண்டுக்குள் புகுந்து 4 'லவ்பேர்ட்ஸ்'களை லபக் என விழுங்கிய பாம்புகள்


கூண்டுக்குள் புகுந்து 4 லவ்பேர்ட்ஸ்களை  லபக் என விழுங்கிய பாம்புகள்
x

கூண்டுக்குள் புகுந்து 4 ‘லவ்பேர்ட்ஸ்’களை லபக் என விழுங்கிய பாம்புகள்

திருப்பூர்

காங்கயம்

கூண்டுக்குள் இருந்தாலும் ஆபத்து அங்கேயும் வந்து கால்கடுக்க காத்து நிற்கும் என்பது நிஜம்தான். வீட்டில் கிளிகள் வளர்ப்பது சிலரின் பொழுது போக்கு அல்ல. அது ஒரு கலையாக நினைப்பார்கள். அதற்காக கிளிகளுக்கு தேவையான அத்தனை பாதுகாப்பு அம்சமும் அங்கு கடைபிடிக்கப்படும்.

காங்கயம் உடையார்காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது வீட்டில் 2 கூண்டுகளில் 8-க்கும் மேற்பட்ட 'லவ் பேர்ட்ஸ்'களை வளர்த்து வந்தார். இந்த 2 கூண்டுகளையும் ஜன்னல் ஓரத்தில் கட்டி வைத்திருந்தார். பொதுவாக பறவைகள் சூழ்நிலைக்கு ஏற்ப சப்தமிடும். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு 2 கூண்டுகளில் உள்ள 8 'லவ்பேர்ட்ஸ்'களும் வித்தியாசமாக பதற்றத்தில் கத்தின.

அப்போது வீட்டிற்குள் இருந்து சண்முக சுந்தரத்தின் மகன் ரவி வெளியே ஓடிவந்தார். அப்போது 2 கூண்டிற்குள்ளும் 2 பச்சை பாம்புகள் படுத்து இருந்தன. அவை கூண்டை விட்டு வெளியே நகர முடியாமல் நெழிந்தன. மேலும் இந்த கூண்டில் வளர்க்கப்பட்ட 4 'லவ்பேர்ட்ஸ்'களை காணவில்லை. அந்த பாம்புகள் தலா ஒரு 'லவ்பேர்ட்ஸ்'களை விழுங்கிய நிலையில், மேலும் ஒரு 'லவ்பேர்ட்சை'வாயில் வைத்து விழுங்க முடியாமல் திணறியது

இதையடுத்து உடனடியாக காங்கயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 2 பாம்புகளையும் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். காங்கயத்தில் இரவு நேரத்தில் வீட்டில் இருந்த 2 கிளிக்கூண்டுகளுக்குள் சென்ற ஒரே அளவிலான 2 பெரிய பச்சை பாம்புகள் 4 'லவ்பேர்ட்ஸ்'களை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story