ஆலமரத்துேமடு பகுதியில் பாம்பு பிடிபட்டது


ஆலமரத்துேமடு பகுதியில் பாம்பு பிடிபட்டது
x

ஆலமரத்துேமடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய பாம்பு பிடிபட்டது

கரூர்

திருக்காடுதுறை அருகே ஆலமரத்துமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவம் அருகே 6 அடி நீளம் உள்ள நாக பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறாமல் படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் குச்சியால் 6அடி நீளமுள்ள நாக பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.


Next Story