சேலம் மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம்-25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
சேலம் மாநகராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. இதில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி 31-வது சிறப்பு மெகா முகாம் நடைபெறுகிறது. இதில், 200 சிறப்பு குழுக்கள் மூலம் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்து இருந்தால் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்திருந்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். அதேநேரத்தில் தனியார் ஆஸ்பத்திரியிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்த கால அளவு 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இன்று நடக்கும் சிறப்பு குழுக்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டு கொண்டுள்ளார்.