மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் உடையார்பாளையத்தில் நாளை நடக்கிறது
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் உடையார்பாளையத்தில் நாளை நடக்கிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் இந்த மாதத்திற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story