சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்


சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

மருத்துவ முகாம்

குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதில் கொசுகள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே திருவெண்காடு, சீர்காழி பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் வரலாறு காணாத மழை பெய்து கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

நடவடிக்கை

இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே முகாம்களில் தங்கி உள்ளனர். தொடர் மழையின் காரணமாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.. ஆனால் இதுவரை எந்தவிதமான மருத்துவ உதவியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படவில்லை.எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து சீர்காழி வட்டாரத்துக்குட்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story