கல்லூரி மாணவரின் கனவில் வந்த இடத்தில் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை
திண்டிவனம் அருகே கல்லூரி மாணவரின் கனவில் வந்த இடத்தில் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருந்தது. பக்தர்கள் பரவசமடைந்தனா்.
விழுப்புரம்
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள வடசிறுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது கனவில் மஞ்சள் நிற உடை அணிந்த பெண் வந்து, வடசிறுவலூர் பச்சை அம்மன் கோவில் எதிரே உள்ள குளக்கரையில் முட்புதரில் ஒரு வேப்ப மரத்தின் பின்புறம் எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருப்பதாகவும், அதை கிராம மக்கள் வழிபட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து வேலன், தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். அதன்படி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு இரு நாகங்களை குடையாக பிடித்தபடி எல்லை பிடாரி செல்லியம்மன் சிலை இருந்தது. இதனால் பரவசமடைந்த பக்தர்கள், அந்த சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, பூமாலை அணிந்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story