வாடிப்பட்டி பகுதியில் பென்னிகுவிக் சிலை அமைக்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை


வாடிப்பட்டி பகுதியில் பென்னிகுவிக் சிலை அமைக்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
x

வாடிப்பட்டி பகுதியில் பென்னிகுவிக் சிலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மதுரை

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பகுதியில் பென்னிகுவிக் சிலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமை இடத்து துணை தாசில்தார் வனிதா தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் ராஜா, சுப்புலட்சுமி, அனுசியா, முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் வரவேற்றார்.

கூட்டத்தில் பாலமேடு சாத்தையாறு அணை சாலையை சீரமைக்க வேண்டும். சாத்தைதையாறு அணையில் பழுதடைந்து வீணாகும் சட்டரை சரி செய்ய வேண்டும். பெரியாறு பாசன கால்வாயில் இரண்டாம் போகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரை மார்ச் 25 வரை நீடித்து தர வேண்டும்.

பென்னிகுவிக் சிலை

வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் அதிகம் காணப்படும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாதம்பட்டி, நீரேத்தான் மயானம் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும், முல்லை பெரியாறு அணை கட்ட காரணமாக இருந்த பென்னிகுவிக் சிலையை வாடிப்பட்டி பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி விவசாயிகள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது. முடிவில் தென்னை விவசாய சங்க தலைவர் சீதாராமன் நன்றி கூறினார்.


Next Story