தாமிரபரணி ஆற்றங்கரையில் கதை சொல்லும் நிகழ்வு


தாமிரபரணி ஆற்றங்கரையில் கதை சொல்லும் நிகழ்வு
x
தினத்தந்தி 2 Sept 2022 3:33 AM IST (Updated: 2 Sept 2022 5:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தின் 232-ம் ஆண்டு விழா- தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபத்தில் கதை சொல்லும் நிகழ்வு

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பல்வேறு பழமைகளையும், பெருமைகளையும் கொண்டது. வெள்ளையர் ஆட்சியில் தென்பாண்டி நாடு, திருநெல்வேலி சீமை என்று அழைக்கப்பட்ட நிலப் பகுதியை 1790-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி "திருநெல்வேலி மாவட்டம்" என்று வரையறுக்கபட்டு புதியதாக உருவாக்கப்பட்டது.

அந்த செப்டம்பர் முதல் நாளை நெல்லை தினம் என கொண்டாட தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் முடிவு எடுத்துள்ளது. இம்மாதம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து உள்ளது.

நேற்று நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குறுக்குத்துறை பகுதியில் உள்ள கல் மண்டபத்தில் முதல் நாள் நிகழ்ச்சி கோலாகலகமாக நடைபெற்றது இந்த நிகழ்வில் ஓவியம் தீட்டல், நாட்டுப்புற நடனங்கள், வரலாற்று மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் நெல்லையின் பழமை, பெருமைகளை எடுத்துரைக்கும் கருத்தரங்கு மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. புருஷோத்தமன், வேல.சங்கர்ராம், ஆரோக்கியம் ஆகியோர் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்வில் நெல்லை மாநகர மேயர் சரவணன், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணை தலைவர் ரமேஷ் ராஜா, வரலாற்று ஆய்வாளர்கள் செ.திவான், வெள்உவன், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


Next Story