தும்பிப்பாடி ஊராட்சியில் கிணற்றில் விழுந்து தத்தளித்த தெருநாய்-தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்
தும்பிப்பாடி ஊராட்சியில் கிணற்றில் விழுந்து தத்தளித்த தெருநாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்,
சேலம்
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி குதிரைகுத்தி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று தெருநாய் ஒன்று தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து பழனிசாமி காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி தெருநாயை மேலே கொண்டு வந்தனர். கிணற்றில் தத்தளித்த தெருநாயை 30 நிமிடங்கள் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story