புத்தாடை வாங்கிக் கொடுக்காததால் மாணவி தற்கொலை முயற்சி
புத்தாடை வாங்கிக் கொடுக்காததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து கொடுக்குமாறு பெற்றோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர்கள் புத்தாடை எடுத்துக் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுத்துக் கொடுக்காததால் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story