விஷம் குடித்து பள்ளிக்கு வந்த மாணவியால் பரபரப்பு
ஆலங்குடியில் விஷம் குடித்து பள்ளிக்கு வந்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை
ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று காலை வகுப்பறையில் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கவனித்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்தபோது தனது தாயார் திட்டியதால் விஷம் குடித்ததாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த மாணவி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story