பள்ளி சுற்றுச்சுவரின் இரும்பு கதவு கழன்று விழுந்ததில் மாணவன் படுகாயம்


பள்ளி சுற்றுச்சுவரின் இரும்பு கதவு கழன்று விழுந்ததில் மாணவன் படுகாயம்
x

பள்ளி சுற்றுச்சுவரின் இரும்பு கதவு கழன்று விழுந்ததில் மாணவன் படுகாயம் ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தம்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மகன் முகேஷ்(வயது 10). இவன் தம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளிக்கு சென்ற முகேஷ் காலை 9.30 மணியளவில் தாமதமாக வந்த மாணவர்களுக்காக சுற்றுச்சுவரின் இரும்பு கதவை திறக்க முயன்றார். அப்போது இரும்பு கதவு கழன்று முகேஷின் இடது கால் தொடையில் விழுந்ததில் படுகாயமடைந்தான். இதனை கண்ட பள்ளி ஆசிரியைகள், அக்கம், பக்கத்தினர் முகேசை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசாரும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story