பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு


பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
x

ஆரணியில் பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆரணி நகரில் உள்ள 11 பட்டாசு கடைகளில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது கடைகளில் தண்ணீர் வாளி நிறைத்து வைத்திருக்க வேண்டும், வெளிச்சம் அதிகம் தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்தக் கூடாது, கடைகளுக்கு 2 வழி இருக்க வேண்டும்,

சீன பட்டாசுகளை விற்க கூடாது, கண்டிப்பாக தீயணைப்பு கருவிகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கடைகாரர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தாசில்தார் ஆர்.ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், திருவேங்கடம், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், இளவரசன் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story