கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து ஆய்வு
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேலூர்
காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றவும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மானியம், விவசாயிகள் பயன் பெறும் வகையில் மேலும் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு விவசாயிகளிடம் தரிசு நிலங்களை எவ்வாறு விளை நிலங்களாக பண்படுத்துவது என்பது குறித்தும், வேளாண் துறை திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.
மேலும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிவரும் விவசாயிகளிடம் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஸ்வநாதன், துணை இயக்குனர் ஸ்ரீபஞ்செயக்குமார், உதவி இயக்குனர் முருகன் உள்ளிட்ட வேளாண் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story