மதுரை அருகே பள்ளிக்கூட வாகனம் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி
மதுரை அருகே பள்ளி வாகனம் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை அருகே பள்ளி வாகனம் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே உள்ள சோலைகொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 47). இவர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்ெபக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது தந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நான்கு வழிச்சாலையில் நாகமலைபுதுக்கோட்டை அடுத்த துவரிமான் சந்திப்பு அருகே சென்ற போது மதுரையில் இருந்து கீழமாத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பள்ளி வாகனம் மோதியது.
சாவு
இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்லப்பாண்டி இறந்தார்.
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.