பொதுமக்கள் திடீர் தர்ணா


பொதுமக்கள் திடீர் தர்ணா
x

கோவில் அலங்கார வளைவு பிரச்சினை, பொதுமக்கள் திடீர் தர்ணா

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்டலிகோடு பகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பொதுப் பாதையில் 2 தூண்களுடன் ஒரு அலங்கார வளைவு வைக்கப்பட்டது. இது அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அலங்கார வளைவை அகற்றினர். இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் ஒரு இரும்பு தூணுடன் அலங்கார வளைவு வைக்கப்பட்டது. இது தொடர்பாக மீண்டும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், வருவாய்துறையினருக்கும் புகார்கள் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த அலங்கார வளைவை அகற்ற வேண்டுமென்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று மாலையில் அலங்கார வளைவை அகற்ற கூடாது என வலியுறுத்தி பெண்கள் உள்பட ஏராளமானோர் பொன்மனை பேரூராட்சி அலுவலகம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்தது. ெகாட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக பா. ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி, பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக வருகிற திங்கட்கிழமை பத்மநாபபுரம் சப்-கலெக்டருடன் பேசி தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் இரவு 8.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.


Next Story