குவிந்து கிடந்த குப்பையில் திடீர் தீ
குவிந்து கிடந்த குப்பையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கரூர்
நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து திருக்காடுதுறை செல்லும் சாலையோரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமான குப்பைகளை கொட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று குப்பைகளில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
Related Tags :
Next Story