ஆலங்குளம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
ஆலங்குளம் பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தினமும் காலையில் ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை செல்லும் அரசு பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அரசு பஸ்கள் தாமதமாக வருவதால், கல்லூரிக்கு செல்வது தாமதமாகி படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவ-மாணவிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று காலையிலும் அரசு பஸ் வழக்கம்போல் தாதமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் ஆலங்குளம் பஸ் நிலையத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அவர்கள், உரிய நேரத்தில் பஸ்கள் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நெல்லையில் இருந்து சுரண்டை நோக்கி சென்ற பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.