பகலில் 101.48 டிகிரி வெயில் பதிவான நிலையில் சேலத்தில் 'திடீர்' மழை
பகலில் 101.48 டிகிரி வெயில் பதிவான நிலையில் இரவில் சேலத்தில் 'திடீர்' மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியதில் இருந்து முதல் 10 நாட்கள் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அதன் கோரத் தாண்டவத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. 6-வது நாளாக நேற்றும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்தது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ேசலம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் அதிகபட்சமாக பகலில் 101.48 டிகிரி வெயில் அளவு பதிவானது.
இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென கோடை மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. இதனால் இரவில் மழை பெய்த பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.