மின்கம்பத்தில் உரசி நின்ற கரும்பு லாரி


மின்கம்பத்தில் உரசி நின்ற கரும்பு லாரி
x

மின்கம்பத்தில் உரசி நின்ற கரும்பு லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

செங்கம்

மின்கம்பத்தில் உரசி நின்ற கரும்பு லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் மினி ஆட்டோக்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால் அடிக்கடி அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு சாலையில் கரும்பு ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மின் கம்பத்தில் உரசி நின்றது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்துக்கு பிறகு சிக்கிய லாரி அங்கிருந்து நகன்றது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

எனவே நெடுஞ்சாலை துறை, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மினி ஆட்டோக்கள், தள்ளுவண்டிகளில் கடைகள் அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story