தேயிலை தோட்ட நிறுவனங்களில் திடீர் ஆய்வு


தேயிலை தோட்ட நிறுவனங்களில் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? என தேயிலை தோட்ட நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, ‌ நீலகிரி மாவட்டத்தில்‌ குன்னூர்‌ தாலுகாவிற்கு உட்பட்ட தோட்ட நிறுவனங்களில்‌ குழந்தை தொழிலாளர்கள்‌ யாரேனும்‌ பணிபுரிகிறார்களா என நீலகிரி மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நீலகிரியில் தோட்ட நிறுவனங்கள்,‌ கடை, உணவு நிறுவனங்கள்‌ மற்றும்‌ ஏதேனும்‌ நிறுவனங்களில்‌ குழந்தை தொழிலாளர்‌ எவரேனும்‌ பணிபுரிகிறார்களா என மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்‌ மற்றும்‌ வளரிளம்‌ பருவத்தினர்‌ ஒழிப்பு மற்றும்‌ ஒழுங்குமுறை சட்டம்‌ 1986-ன்‌ பிரிவு 14-ன்படி உரிமையாளருக்கு நீதிமன்றம்‌ மூலம்‌ ரூ.50,000 வரை அபராதம்‌ அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட்டு வருகிறது என குன்னூர்‌ தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ (அமலாக்கம்‌) சதீஸ்குமார்‌ தெரிவித்து உள்ளார்‌. மேலும் குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை குழந்தை தொழிலாளர்‌ தொடர்பான புகாருக்கு, 6383573843 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.



Next Story