தமிழ்நாடு முழுதும், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


தமிழ்நாடு முழுதும், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x

தமிழ்நாடு முழுதும், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

சென்னை,

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. மாணவர்களுக்கு கல்வி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்க சமகிர சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவி மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கு செல்ல குழந்தைகளை கண்டறியும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆசிரியர்கள் குழுக்கள் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் , பயிற்றுனர்கள் ,சத்துணவு அமைப்பாளர்கள், தொழிலாளர் நலத்துறை, வருவாய் துறை மற்றும் சமூக துறையினர் இதில் கலந்துகொண்டு கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

ஜனவரி 11ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்பதன் காரணமும் பதியப்பட உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் அருகில் உள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேர்க்கவும் , பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story