வேன் மோதி தையல் தொழிலாளி பலி
வேன் மோதி தையல் தொழிலாளி பலியானார்.
தோகைமலை முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). தையல் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தோகைமலை- மணப்பாறை சாலையில் வந்தபோது, பின்னால் தோகைமலையை சேர்ந்த இப்ராம்ஷா (43) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன், கணேசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கணேசன் அண்ணன் ராஜலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.